Categories
உலக செய்திகள்

தென் சீன கடல் பகுதியில் பதற்றம்…. விபத்துக்குள்ளான போர் விமானம்…. காயமடைந்த வீரர்கள்…!!!

தென் சீன கடல் பகுதியில், அமெரிக்காவை சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளாகி 7 வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

சீனா, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக அங்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த போர் விமானங்களும் சோதனை பணியில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் கர்ல் வின்சன் என்ற போர்கப்பல், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தது.

அப்போது பயிற்சிக்குப் பின், எஃப் 35சி வகை போர் விமானம், கப்பலில் இறங்க முயன்றது. அந்த சமயத்தில் போர்க்கப்பலில் இருக்கும் விமான ஓடுதளத்தில் போர் விமானம் திடீரென்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 7 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் நல்லவேளையாக விமானி விமானத்திலிருந்து வெளியேறி கடலில் குதித்ததால், காயங்கள் இன்றி தப்பித்தார். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |