Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 1ஆம் தேதி முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு?…. கல்வி அதிகாரிகள் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வருகிற 31ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்கலாமா என்று பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வியின் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா அதற்கான தேவை இருக்கிறதா என்று விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், புதிதாக அறிமுகமான திட்டங்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமை செயலகத்திலும் பள்ளிகளை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறப்பது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஊரடங்கின் அடுத்த நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அடுத்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட இருக்கிறது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

Categories

Tech |