தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.. மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்..
இதையடுத்து தஞ்சையில் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது தொடர்பாக காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தார்கள்.. இந்நிலையில் தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.