கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களது படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள்.
மேலும் அந்த படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் முகாம் ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இலங்கை அரசு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக முகாமில் நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை இலங்கையிலுள்ள யாழ் மாவட்டத்தை சார்ந்த கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவரான அன்னலிங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்து கடலின் வளத்தை அழிக்கிறார்கள் என்று இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.