நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பெருந்தொற்றின் அளவு 10 சதவீதமாக இருப்பதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. ஆனால் டெல்லியில் 5-வது அலை வீசி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.