பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் புழுதி புயல் வீசிய இடத்திற்கே சென்று அந்த சம்பவத்தை தொகுத்து வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வசித்து வரும் சாந்த் நவாப் என்ற செய்தியாளர் நியூஸ் சேனல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் புழுதி புயல் வீசுவதை நேரில் சென்று தொகுத்து வழங்கியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, சவுதி மற்றும் துபாயில் வீசும் புழுதிப்புயல் தற்போது பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புழுதி புயலின் காரணத்தினால் தனது கண்களை கூட திறக்க முடியவில்லை என்றும், என்னுடைய வாயில் தூசி படிந்துள்ளதாகவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடலோரத்தில் மிக ஒல்லியாக இருப்பவர்கள் நின்றால் காற்றில் அடித்து செல்லப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் ஒட்டகத்தின் மீதேறி அங்குள்ள நிலைமையை தொகுத்து வழங்கியுள்ளார்.