மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரும். 2022 ஜனவரி மாதத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்படும் என்று இதுவரையிலும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று 7வது ஊதிய குழு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனிடையில் AICPI அறிக்கையின்படி, நவம்பர் 2021 வரை அகவிலைப்படியில் (டிஏ) 3 சதவீதம் அதிகரிப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
7 வது ஊதிய குழுவின் புள்ளிவிவரங்களின்படி நவம்பர் 2021 வரை அகவிலைப்படி 34 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கும். ஆகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.2022 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வழங்கப்படலாம். 3 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்புக்கு பின் ரூ 18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ73,440 ஆக இருக்கும். இதன் காரணமாக வருடத்துக்கு மொத்தமாக ரூபாய் 6,480 அகவிலைப்படியை ஊழியர்கள் பெற்று கொள்வார்கள். இவ்வாறு மத்திய அரசின் அகவிலைப்படி அதிகரிப்பால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000
புதிய அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்
புதிய அகவிலைப்படி (34%) – ரூ.73,440/ஆண்டு
அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ.5580/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ 6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56,900
புதிய அகவிலைப்படி (34%) – ரூ 19,346/மாதம்
புதிய அகவிலைப்படி (34%) – ரூ 232,152/ஆண்டு
அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ 17639/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது – 19346- 17639 = ரூ 1,707/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484