Categories
மாநில செய்திகள்

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து…. தீண்டாமையின் உச்சம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தர்மபுரி ஈட்டியாம்பட்டியில் கட்டப்பஞ்சாயத்து செய்த மளிகை கடை வியாபாரி விஜயகுமார் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயகுமார் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்க கூடாது. அவர்களுடன் யாரும் பேசக் கூடாது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் விஜயகுமாரின் உறவினர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் தர்மகர்த்தா தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட விஜயகுமார் அளித்த பேட்டியில், தனது பாட்டியின் பட்டா இடத்தை வீதியின் புறம்போக்கு நிலம் எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்ய ஊர் தர்மகர்த்தா ராஜசேகர், ஊர்கவுண்டர் தவுரிசெல்வம் உள்ளிட்டோர் முயற்சி செய்கின்றனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவே, எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |