Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சண்டே ஸ்பெஷல் சிக்கன் நூடுல்ஸ் செய்ய தயாரா …!!

சிக்கன் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் :

சிக்கன்-200 கிராம்

நூடுல்ஸ்2 பாக்கெட்

வெங்காயம்-200 கிராம் (நறுக்கியது)

பச்சை மிளகாய்-3

மிளகு தூள்-1 டீஸ்பு ன்

சர்க்கரை-2 டீஸ்பு ன்

சோயா சாஸ்-2 டீஸ்பு ன்

தக்காளி சாஸ- 2 டீஸ்பு ன்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்-தேவையான அளவு

Image result for சிக்கன் நூடுல்ஸ்

செய்முறை :

சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அகலமான ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சு டானதும், அதில் நு}டுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.

Categories

Tech |