Categories
தேசிய செய்திகள்

இன்னொருவர் பணம் எனக்கு வேண்டாம்”…. ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்…. ஆச்சரியம்….!!!!

பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை UPI வழியாக பயணி ஒருவர் அனுப்பியுள்ளார். ஆனால் 120 ரூபாய் அனுப்புவதற்கு பதில் பயணி 10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். இதனை தாமதமாக அறிந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி உடனடியாக அந்த பணத்தை பயணியைத் தொடர்பு கொண்டு திரும்ப கொடுத்துள்ளார்.

இவ்வாறு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் மகிழ்ந்த அந்த பயணி அவரது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கோபி கூறியபோது, எனக்கும் வறுமை இருக்கிறது. வீட்டு வாடகை கூட இன்னும் கொடுக்கவில்லை. எனினும் இன்னொருவர் உழைப்பினால் கிடைத்த பணம் எனக்கு வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |