நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் மூன்று வாரங்களில் ஆலோசனைகளை அளிக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.