கனடா நாட்டில் மாயமானதாக கூறப்பட்ட இலங்கைப் பெண் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரசாந்தி அர்ச்சுனன் என்ற 28 வயது பெண் கடந்த 16 ஆம் தேதி அன்று கனடாவில் மாயமானார். எனவே அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரை கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த பெண், இறுதியாக கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு 7:45 மணியளவில் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதிகளில் தென்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்தி அர்ச்சுனன் பலியானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.