Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…. குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கணுமா?… இதோ சூப்பர் ஆஃபர்….!!!!

சமையல் சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்தால் நிறைய சலுகைகள் கிடைக்கிறது. இதனிடையில் ICICI வங்கியின் ‘பாக்கெட்ஸ் ஆப்” மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்தால் கேஷ்பேக் சலுகையைப் பெற்று கொள்ளலாம். பாக்கெட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்தால் உங்களுக்கு 10% வரை கேஷ்பேக் கிடைக்கும் (அதிகபட்சம் ரூ.50). சிலிண்டர் முன்பதிவு தவிர்த்து பாக்கெட்ஸ் ஆப் மூலமாக ரூ200 அல்லது அதற்கு மேல் பில் பேமெண்ட் செய்தால் கேஷ்பேக் கிடைக்கும்.

# முதலாவதாக மொபைல் போனில் Pockets ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யவும்.

# இதையடுத்து அதை ஓப்பன் செய்தால் “ரீசார்ஜ் மற்றும் பே பில்ஸ்” பிரிவிலுள்ள பே பில் வசதியை கிளிக் செய்யவும்.

# இப்போது Choose Billers என்பதில் More எனும் ஆப்ஷன் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.

# பின் LPG சிலிண்டர் ஆப்சன் இருக்கும் அந்நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அடுத்து உங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்து புக்கிங் தொகையைச் செலுத்த வேண்டும்.

# அதன்பின் பரிவர்த்தனை செய்த பிறகு ரிவார்டாக 10% (அதிகபட்சம் ரூ.50) கேஷ்பேக் கிடைக்கும்.

# அதனை தொடர்ந்து ரிவார்டு ஆப்சனை திறந்தவுடன் உங்களுடைய வாலட்டில் கேஷ்பேக் வரவு வைக்கப்படும்.

அனைத்து வீடுகளிலும் LPG சிலிண்டர் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதற்கிடையில் ஜனவரி மாதத் தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 100 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டது. இதனால் LPG எரிவாயு சிலிண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை மாறுகிறது. இதனிடையில் விலை உயர்வு சமயத்தில் இதுபோன்ற கேஷ்பேக் சலுகைகள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

Categories

Tech |