Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… 34 % அகவிலைப்படி உயர்வு?…. இதோ முழு விபரம்….பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 3 தவணை அகவிலைப்படி (DA) விரைவில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரையிலும் அரசு ஊழியர்களுக்கான DA தொகை 31 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அகவிலைப்படி தொகை 3 சதவீதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அதிகரித்தால் ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாய் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருத்தமான காரணியை தீர்மானிக்க முடியும்.

தற்போது அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின் இது வரவு செலவுத் திட்ட செலவில் சேர்க்கப்படும். இதனிடையில் ஊடக அறிக்கையின்படி மத்திய அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கலாம் என்று தெரிகிறது. அதன்படி 3 % அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை உயரும். இப்போது பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT), நிதி அமைச்சகம் மத்திய அரசுடன் நிலுவைத் தொகை தொடர்பான விவாதங்களை மேற்கொண்டு வருகிறது.

எனினும் இதுவரையிலும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் விவாதிக்கலாம் என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அமைச்சரவை செயலாளருடன் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தற்போது மத்திய அரசாங்கம் நிலுவையிலுள்ள DA மற்றும் DR தொகையை ஒரே முறையில் வழங்கினால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை பெற முடியும்.

Categories

Tech |