Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். இந்த போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் VAO, 7b, 8 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2022ம் வருடத்துக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அவற்றில் நடப்பாண்டில் 22 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்களும் புகுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலமாக கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், 100 சதவீதம் தமிழ் இளைஞர்களை அரசு பணியில் அமர்த்தும் அடிப்படையிலும் அரசு போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சமாக 40 % மதிப்பெண் பெற வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அப்போதுதான் தேர்வினுடைய பிற பாட வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும். அதாவது தமிழ் மொழித் தேர்வு மதிப்பீட்டு தகுதித் தேர்வாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் குரூப்-3, 4, 7-பி, 8 ஆகிய பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான பாடத்திட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத இருப்போர் இணையத்தளம் மூலமாக பாடத்திட்டங்களை பார்த்து தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |