Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டிபோட்டு கொண்ட வியாபாரிகள்…. 70 லட்சம் வரை விற்பனை….

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,156 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,239 ரூபாயில் இருந்து 10,719 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 12,709 ரூபாயில் இருந்து 14,519 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 3,500 ரூபாயில் இருந்து 6,609 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |