Categories
அரசியல்

“இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கல!”… இந்திய திணிக்குறீங்களே அத தா எதிர்க்கிறோம்….. மு.க. ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

“தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. அதனை மற்றவர் மீது திணிக்கக் கூடிய ஆதிக்கத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பெரியார் மற்றும் அண்ணா இந்தி திணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். நாங்கள் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |