சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டில்கள், புகையிலை பொருட்கள் விற்பனை என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 45 பேரையும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 15 புகையிலை பாக்கெட்டுகள், 362 மதுபாட்டில்கள், ரூ.4500 ரொக்கம் மற்றும் ஒரு சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.