உல்லாசத்திற்கு மறுத்த மனைவி மீது கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நரசிங்காபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் ஈஸ்வரி தூங்கிவிட்டார்.
ஆனால் கணேசன் தூங்காமல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஈஸ்வரியை எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு ஈஸ்வரி உடல் சோர்வாக உள்ளது என ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதம் பிடித்துள்ளார். ஆனால் கணேசன் உடனே உல்லாசத்திற்கு வர வேண்டும் என ஈஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் காலையில் ஈஸ்வரி எழுந்திரிக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தப்பிச் சென்ற கணேசனை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கணேசன் கல்லை போட்டு கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.