Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கொடுக்க முடியாததால்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகர் பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மஞ்சு என்ற மகள் உள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு லட்சுமியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி கூலி வேலை செய்து தனது மகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் அப்பகுதியில் உள்ள சிலரிடம் குடும்ப செலவுக்காக கடன் வாங்கியுள்ளார்.

கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த லட்சுமி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது மகள் மஞ்சு கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |