சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சாகுல் அமீது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சாகுல் அமீது விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சாகுல் அமீதை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.