Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! 8 லட்சம் வரை உடனடி கடன்….!!

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் 8 லட்சம் வரை அவசரகால கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது அவசர காலத் தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டாலோ 8 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்தாலே போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கடனுக்கான ஒப்புதல் சில நிமிடங்களில் கிடைத்து விடும் எனவும் தனிப்பட்ட முறையில் செயல்பாட்டு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடனை எல்லோரும் பெற்றுவிட முடியாது. அரசுத்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும்..

Categories

Tech |