Pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயில் பத்தாவது தவணை உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு சமீபத்தில் பத்தாவது தவணை விரைந்து வழங்கப்பட்டது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தவணை தொகை விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விவசாயிகள் கொடுத்த தகவல்களில் ஏதாவது தவறு இருப்பின் தவணை தொகை வராது.
அதாவது விவசாயின் பெயர், வயது போன்றவை ஆதார் கார்டில் உள்ள பெயர் ,வயதுடன் பொருந்தி இருக்க வேண்டும் இல்லையேல் இந்த தவணைத் தொகை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். மேலும் சில விவசாயிகளிடம் ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ட்ரைவிங் லைசன்ஸ் போன்றவற்றை கொடுத்திருப்பார்கள். அவை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் மிக முக்கியமான ஒன்று விவசாயின் மொபைல் எண் இது தற்போது பயன்பாட்டில் இருக்க வேண்டும் அவ்வாறு பயன்பாட்டில் இல்லையேல் அதனை அப்டேட் செய்ய வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் விரைவில் பத்தாவது தவணைத் தொகையை நீங்கள் பெறலாம்.