Categories
அரசியல்

இந்த உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்காது…. போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

அரசு கழக பேருந்துகள் இன்று காலையிலிருந்து மாமண்டூர் சாலைவழி உணவகத்தில் நிற்காது  என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய பயண வழியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமில்லாத உணவுகள் அதிக விலையில் விற்கப்படுவதாக வந்த புகாரின் படி, மாமண்டூர் பயண வழித்தட உணவகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

அங்கு சுகாதாரம் இல்லாத, உணவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும், குறைகள் சரி செய்யப்படவில்லை. எனவே, அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் இன்று காலையிலிருந்து மாமண்டூர் சாலைவழி உணவகத்தில் நிற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |