ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் தற்போது வரை 42 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளார்கள்.
மேலும் 118 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 2,000 ரத்துக்கும் மேலான வீடுகள் இந்த கடுமையான பனிப்பொழிவால் சேதமடைந்துள்ளது.
இந்த தகவலை தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அரசு பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதால் கார் போன்ற வாகனங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது.