Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: பிரபல நாட்டிற்கு “10,138.80 கோடி ரூபாய்” நிதி…. கடுப்பாகுமா ரஷ்யா …? முடிவு செய்த ஐரோப்பிய யூனியன்….!!

ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு போரிட்டு கிரீமியாவை தன்னுடன் இணைந்துள்ள நிலையில் உக்ரேனுக்கு அவசர கால நிதியாக 10,138.80 கோடி ரூபாய் நிதி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் நாட்டின் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது.

இதைதொடர்ந்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க ஐரோப்பிய யூனியன் கமிஷன் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது உக்ரேனுக்கு அவசரகால நிதியாக 10,138.80 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஐரோப்பிய யூனியன் கமிஷனின் தலைவரான உர்சுலா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |