வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி முருகன் வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்.
வீட்டுவசதி வாரியத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறுகள் விரைந்து சரி செய்யப்படும் என பூச்சி முருகன் வாக்குறுதி கொடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகன் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “என்னை வீட்டுவசதி வாரிய தலைவராக நியமித்த முதல்வருக்கும் வாரிய அமைச்சர் முத்துசாமிக்கும் முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கடந்த ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் தவறுகளை அதிகாரிகள் மற்றும் வீட்டு வசதி வாரிய தலைவருடன் சேர்ந்து சரி செய்யும் பணியில் உடன் இருப்பேன் என கூறினார்.” அவரைத் தொடர்ந்து பேசிய வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி சென்னையில் உள்ள 193 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகளில் 93 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன இவற்றை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெறும்.” என கூறினார்.