Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளக்கெண்ணை மாதிரி பதில்- முதல்வரை சரமாரியாக விமர்சித்த ஜெயக்குமார் …!!

செய்தியளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரூபாய் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. எனவேதான்  சிபிஐ விசாரணை கேட்டு கோட்டிற்கு எங்கள் கட்சி சார்பாக போய் உள்ளோம். சிபிஐ விசாரணை வேண்டும்.

தப்பு நடந்துள்ளது என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அதற்கான அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கைக்கு பதில் சொல்லணும். அதைவிட்டுட்டு, வெளக்கெண்ணை மாதிரி பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்கிற வகையில் விவாதிக்க தயார் என்று சொல்கிறார். இதில் என்ன விவாதிக்க தயார்.

உள்ளங்கையில் நெல்லிக்கனி போல ஒவ்வொரு கடையிலும் இன்று காது கொடுத்து கேட்க முடியல,  அந்த அளவுக்கு பொதுமக்கள் வாங்குகின்றவர்கள் எல்லாம் அப்படி அர்ச்சனை செய்து கொண்டு போகிறார்கள். திமுக அரசாங்கத்தை கழுவி கழுவி கழுவி இந்த அரசாங்கத்தை ஊத்துறாங்க.  திமுக தலைவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனே என்ன சொல்றாரு ? யார் செய்த தவறு செய்தால்  நடவடிக்கை எடுப்போம் என்று… தவறு செய்ததே நீங்கள் தான்…  அப்பா யார் தவறு செய்ய முடியும்.

கிராம சபையைக் கூட்டினான் பொங்கல் பரிசு எல்லாம் வெடிக்கும். பணம் எங்கே என்று கேட்பார்கள் ? அம்மா ஆட்சியில் ரூபாய்  2500 ரொக்கமாக கொடுத்தது எங்கே என்று கேட்பார்கள் ? மற்ற பொருட்கள் எல்லாம் கலப்பட பொருள் கொடுத்தீர்கள். அப்படி என்று தூக்கி மூஞ்சில அடிப்பார்கள் இதெல்லாம் தெரிந்துதான் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |