Categories
சினிமா

“என்னதான் இருந்தாலும் நம்ம தனுஷ் இப்படி பண்ணி இருக்க வேண்டாம்”…. அப்செட்டான கோலிவுட் திரையுலகம்…!!

தனுஷ் நடிப்பில் உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  இதனால் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துவிட்டு நேரடியாக ஹைதராபாத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாறன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போகிறோம் என கூறி விட்டு ஓடிடி தளத்தில்  படத்தை வெளியிடுவதால் தனுஷ் மிகவும் அப்செட்டில் உள்ளாராம். தனது படம் குறித்த எந்த அறிவிப்பும் வந்தாலும் அதனை தன்னுடைய இணையதள பக்கத்தில் ஷேர் செய்வது தனுஷின் வழக்கம் இந்த படத்தில் பஸ்ட் சிங்கிளை கூட தனது இணையதள பக்கத்தில் அவர் பகிரவில்லையாம். “என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனுஷ் இவ்வாறு செய்திருக்கக் கூடாது..” என கூறி படக்குழு வருகிறது.

Categories

Tech |