Categories
வேலைவாய்ப்பு

66 காலிப்பணியிடம்…. 10-ஆம் வகுப்பு தகுதிக்கு…. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை….!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

தட்டச்சர் – 2

டிக்கட் விற்பனையாளர் – 10

காவலர் – 24

தூர்வை – 20

துப்புரவுப் பணியாளர் – 10

ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

01.02.2022 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

தட்டச்சர் – 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசால் நடத்தப்படும் தொழில்நுட்பத் தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிக்கட் விற்பனையாளர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர் – தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தூர்வை – தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவுப் பணியாளர் – தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :

தட்டச்சர் – 18,500/- to 58,600/- + படிகள்

டிக்கட் விற்பனையாளர் – 18,500/- to 58,600/- + படிகள்

காவலர் – 15,900/- to 50,400/- + படிகள்

தூர்வை – 10,000/- to 31,500/- + படிகள்

துப்புரவுப் பணியாளர் – 10,000/- to 31,500/- + படிகள்

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு / Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,

இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்,

இராமநாதபுரம் மாவட்டம் – 623526

விண்ணப்பிக்க கடைசி தேதி :

23.02.2022

IMPORTANT LINKS

https://drive.google.com/file/d/1Pr5e6cybOeKSnhaovlPvle0krQ-JF98-/view

https://hrce.tn.gov.in//hrcehome/index.php

Categories

Tech |