தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பள்ளிகள் திறப்பு , ஆன்-லைன் வழி பாடங்கள், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.