டெல்லியில் தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை இன்று வழங்குகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறந்த தமிழ் படமான பாரம் படம் விருது பெறுகிறது. பாபாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உடல்நலக்குறைவினால் மருத்துவர் தன்னை பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் அமிதாப்பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விழா முடிந்த பிறகு விருது பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்தளிக்க இருக்கிறார்.