Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி! எவ்ளோ பெருசு… ராட்சத காளான்… ஹங்கேரியில் நடப்பதை பாருங்கள்…!!!

ஹங்கேரி நாட்டில் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டினில் இருக்கும் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கம் மிகப்பெரிய காளான் போன்று காட்சியளிக்கிறது. மேலும் இந்த அரங்கினுள் சூரிய ஒளி கதிர்கள் நுழையும் வகையில் அதன் மேற்கூரையில் மிகப்பெரியதாக நூறு துளைகள் போடப்பட்டிருக்கிறது.

இது மட்டுமன்றி, இரைச்சல் இல்லாமல் இசையை ரசிக்கும் வகையில் கண்ணாடி சுவர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 40 அடி உயரத்தில் இருக்கும் இந்த 96 கண்ணாடி சுவர்களில்  இசையின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய வசதியும் இருக்கிறது.

Categories

Tech |