தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்துக் கொள்ளவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ தனுஷ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பட விழா ஒன்றில் ரஜினி தனுஷை பற்றி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக நான் இதை கூறவில்லை தனுஷ் மிகவும் நல்ல பையன், தங்கமான பையன், தாய் தந்தையை மதிப்பவர் அப்பா அம்மாவை தெய்வமாக நினைப்பவர். மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். அவர் ஒரு நல்ல கணவர் நல்ல அப்பா, நல்ல மாப்பிள்ளை, எனக் கூறியுள்ளார். எப்படியேனும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து விட மாட்டார்களா என ரஜினிகாந்த் எதிர்பார்த்து காத்திருக்கிறார். பிரிந்த கையோடு இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். தனுஷ் ஹைதராபாதில் நடைபெறும் ஷூட்டிங்கிற்காக அங்கே உள்ளார். ஐஸ்வர்யாவும் தான் இயக்கி வரும் காதல் பாடலின் வேலைகளை ஹைதராபாதில் தான் தொடர்ந்து வருகிறார்.