Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. பிப்ரவரி 8ஆம் தேதி கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ள அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – 2 பதவிக்கு 2021 டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 46 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின், “மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சியகம்” இணைந்து முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க இருக்கின்றன.

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற இருக்கும் இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள வரும் 27 முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ‘மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சியகம் அல்லது பார் கவுன்சில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |