Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்கன் சாப்பிட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிக்கன் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ரத்தினம் தெருவில் ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரவல்லூரில் இருக்கும் பிரபல ஹோட்டலில் இருந்து சிக்கன் ஆர்டர் செய்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ரஞ்சித் வெந்நீர் குடித்து உள்ளார். சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டதுடன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ரஞ்சித் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ரஞ்சித்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிக்கன் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ரஞ்சித் இறந்தது தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ரஞ்சித் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |