நடிகை டாப்ஸி கதைகளை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை டாப்ஸி, தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுசுடன் நடித்திருந்தார். அதன்பிறகு, தமிழில் சில படங்கள் தான் நடித்தார். தற்போது பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை டாப்ஸி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, “நான் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதைகளை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேன்.
வணிக ரீதியிலான திரைப்படங்களைத் தான் ரசிகர்கள் விரும்புவர் என்று நினைத்து அது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்தது தான் நான் செய்த தவறு. அதன்பின் நான் பார்க்க விரும்பும் திரைப்படங்களை போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினேன்.
அது தான் எனக்கு சரியாக அமைந்திருக்கிறது. மேலும், ஒரு கதையை கேட்கும்போது நான் நடிகையாக கேட்பதில்லை. என்னை ரசிகராக நினைத்துக்கொண்டு கதையை கேட்டு விட்டு அதில் நடிக்கலாமா? என்று தீர்மானிக்கிறேன்.
இந்தி திரைப்படங்களில் நடித்தாலும் தென்னிந்திய சினிமாவிலிருந்து விலகவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் ஆண்டிற்கு ஒரு திரைப்படம் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்