நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி தியாகிகளின் படங்களுக்கும், மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பொறுத்த அளவில் மக்கள் தான் அனைத்திற்கும் எஜமானர்கள். இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்கள் மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் சேர்த்து அரசு அல்வா கொடுத்துவிட்டது என்பதை பத்திரிக்கையை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
எனவே நகர்ப்புற தேர்தலில் இதற்கான பிரதிபலிப்பு நிச்சயம் நடக்கும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் முறைகேடு நடந்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க போவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இவ்வாறு செய்தால் மக்களுக்கு என்ன பயன் ? உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட நிர்வாகிகள் மீது அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.