தாசில்தாரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சபரீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். இவர் பேரூரில் தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சபரீசன் குடியை நிறுத்துவதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்த இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த சபரீசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரீசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்.