தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 3-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சாய்குமார், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அதேபோல் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தினேஷ் கிருஷ்ணன் திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் வெளியேறியதற்கான காரணம் என்ன ?என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தினேஷ் கிருஷ்ணன், “தனுஷ் நடிக்கும் படத்தில் பணிபுரிய முடியாமல் போனது துரதிஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.