நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகையை சுற்றியுள்ள பாலையூர், செல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நோயானது காலம் செல்லச் செல்ல பயிர் முழுவதிலும் பரவி பின்னர் நோயாக மாறும் அபாயம் உள்ளது.
இதனால் அறுவடை காலங்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கூறப்படுகிறது. எனவே மஞ்சள் நோய் தாக்குதலில் இருந்து விடுபட விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி உடனடியாக கள ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.