Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே உஷார்…. ரயில்வே துறை பணிகளில் சேர தடை…. பரபரப்பு அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல பிரச்சினைகளால் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவது சாதாரணமாகி விட்டது. மேலும் தமிழகத்திலும் சில நேரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில் பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில்வே வேலையில் சேர விரும்புவோர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் ரயில்வே வேலையை பெறுவதற்கு நிரந்தர தடையை சந்திக்க நேரிடும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |