இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இதை தொடர்ந்து இவர்கள் அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாட விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், “எங்களின் காதல் வாழ்க்கை தற்போது நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இதைத் தவிர எங்களுக்கு தனித்தனி குறிக்கோள் இருப்பதால் அதை நாங்கள் வெகு விரைவில் அடைத்துவிட்டு திருமணத்திற்கு தயாராகுவோம். மேலும் செலிபிரிட்டிகளின் திருமணங்கள் என்றாலே அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரும் கொரோனா தொற்று குறைந்த பின்னரும் திருமணம் செய்து கொள்வோம்” என்று கூறியுள்ளார்.