மத்திய அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் வருடம் பட்ஜெட்டில் பெரும் நிவாரணத்தை அரசு வழங்கியது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான பயணக் கொடுப்பனவு விடுப்பு திட்டத்தில் ரொக்க வவுச்சர் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் இந்தத் தொகைக்கு வரி செலுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி பண வவுச்சர் திட்டமானது 12/10/2020 அன்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. இதையடுத்து இத்திட்டத்தில் தனியார் மற்றும் பிற மாநில ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தாக்கம் காரணமாக 2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் LTC க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில் LTC என்பது ஒரு முறை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் ஊழியர் தன் சொந்த ஊருக்கு இரண்டு முறை செல்லவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பயணக் கொடுப்பனவில் ஊழியர்கள் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவுகளை பெறுகிறார்கள்.
அதனுடன் ஊழியர்களுக்கு 10 நாட்கள் வரை பிரிவிலேஜ் விடுமுறை கிடைக்கும். மேலும் ரொக்க வவுச்சர் திட்டத்தில் LTC க்குப் பதிலாக ஊழியர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படும் மற்றும் ஊழியர்களின் கிரேடுக்கு ஏற்ப பயணக் கட்டணம் செலுத்தப்படும். இத்திட்டத்தை பயன்படுத்தும் ஊழியர் 3 மடங்கு கட்டணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்த கட்டணம் அனைத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். முக்கியமாக 12 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான ஜிஎஸ்டியை ஈர்க்கும் அடிப்படையில் ஊழியர்கள் பணம் செலவழிக்க வேண்டும்.