சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் துணை செயலாளர் பதவிக்கு காளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.