பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம். இதனால் மும்பையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் குளிரின் தாக்கம் மும்பையில் தற்போது கடுமையாக உள்ளதால் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று திடீரென காற்று மாசுபாடு மிக மோசமான எட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சமீர் மும்பையில் நேற்று மதியம் காற்று மாசு தரக்குறியீடு சரமாரியாக பதிவானது. அதாவது காற்று மாசு தரக்குறியீடு 271-ஆக பதிவாகியுள்ளது. அதேசமயம் டெல்லியில் காற்று மாசு 235-ஆக பதிவானது.
எனவே டெல்லியை விட மும்பையில் நேற்று மோசமான அளவில் காற்று மாசுபாடு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதோடு மட்டுமில்லாமல் பலருக்கும் சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.