Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் தினசரி பாதிப்பு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது . இதன் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |