சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காயல்பட்டினம் பகுதியில் வசிக்கும் பைசல் புகாரி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பைசல் புகாரியை கைது செய்ததோடு அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.