Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அந்த சிறுவன் தான் காரணம்” தற்கொலை செய்த பெண்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமபட்டிணம் பகுதியில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஹோட்டலுக்கு வந்து சென்ற போது ரேகாவிற்கும் சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ரேகா எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் சிறுவன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவர்தான் எனது சாவுக்கு காரணம் எனவும் ரேகா எழுதி வைத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேகா வற்புறுத்தியதாகவும் அதற்கு சிறுவன் மறுப்பு கூறியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |