கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் பறவை காய்ச்சலால் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா- தமிழக எல்லைகளில் கால்நடைத் துறை சார்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்ட எல்லையான உடுமலை சோதனைசாவடி பகுதியில் கால்நடை துறை சார்பாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோழி முட்டை, கோழி தீவனங்கள் ஏற்றி வரக்கூடிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.